வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை முன்னெடுப்பு -
வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இன்று 500 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
வவுனியா குளக்கரை அண்டிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக பனை விதைகளை விதைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் குளக்கரை அண்டிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை முன்னெடுப்பு -
Reviewed by Author
on
September 21, 2019
Rating:

No comments:
Post a Comment