19 வயதில் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட அப்பாவி சிறுவனின் தாய் நான்: 28 ஆண்டுகளாக தொடரும் பாசப்போராட்டம் -
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் குற்றம்சாட்டுப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறபித்தது.
அதாவது, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, 2018 செப்டம்பர் 9ம் திகதி-யே தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 7 பேர் விடுதலையை பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இன்று வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர் 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா? என பேரறிவாளனின் தாய் அற்புத்தம்மாள் ட்விட் செய்துள்ளார்.
காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அவர் 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா?
19 வயதில் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட அப்பாவி சிறுவனின் தாய் நான்: 28 ஆண்டுகளாக தொடரும் பாசப்போராட்டம் -
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment