புலம்பெயர் தமிழர்களிடம் ஏமாற்றுக் கதைகள்! பெருந்தொகை பணம் பெறும் தரப்பு -
கல்குடா தொகுதிக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வாழைச்சேனை இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு, பிரதேச அபிவிருத்தி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இணைப்பாளர் ஜென்ரல் இ.டி.டபிள்யு.சொய்சா கலந்துகொண்டார்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,
வாய்ப்பேச்சில் மட்டுமே அரசியல் நடாத்தி சேவை செய்வதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்த மக்களிடம் ஏமாற்று கதைகளை கூறி அங்கிருந்து பெரும் தொகை பணங்களை பெற்று வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
இணைப்பாளர் ஜெனரல் சொய்சா உரையாற்றும்போது, ஒரு நாடு அபிவிருத்தி காண வேண்டுமாயின் அந் நாட்டிற்கு தகுதியான தலைவர் ஒருவர் இருக்க வேண்டும்.
இந் நாட்டினை சந்தோஷமாகவும் இனப் பாகுபாடின்றி ஆட்சி செய்ய கோத்தபாய ராஜபக்ஷவிற்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.
புலம்பெயர் தமிழர்களிடம் ஏமாற்றுக் கதைகள்! பெருந்தொகை பணம் பெறும் தரப்பு -
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment