ஈராக்கில் மோசமாகும் உள்நாட்டு மோதல்.. 2 நாளில் 63 பேர் பலி பதற்றம்
ஈராக்கில் ஊழல், வேலையின்மை மற்றும் அடிப்படை சேவைகளின் பற்றாக்குறை தொடர்பாக அக்டோபர் 1-ம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை தொடங்கின.
ஆனால், பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டகாரர்களை எதிர்க்கொள்ள நிலைமை மிக மோசமாக மாறியது.
கடந்த இரண்டு நாட்களில் ஈராக்கின் தலைநகரிலும் அதன் தெற்கிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 63 பேர் இறந்துள்ளதாக தேசிய உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் தீவிரமடைந்த மோதல்களில் தெற்கு மாகாணங்களான Dhi Qar மற்றும் Missan அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஈராக்கின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தெற்கில் அரசாங்க மற்றும் துணை ராணுவ அலுவலகங்களை எரித்து ஆர்ப்பாட்டங்காரர்கள் புதிய திருப்பத்தை எடுத்துள்ளன என தெரிவித்துள்ளது.
ஈராக்கில் மோசமாகும் உள்நாட்டு மோதல்.. 2 நாளில் 63 பேர் பலி பதற்றம்
Reviewed by Author
on
October 27, 2019
Rating:

No comments:
Post a Comment