380 ஏக்கர் வயல் நிலங்களை பற்றைக்காடுகளாக்கிய கடற்படையினர் -
10 வருடங்களுக்கு மேலாக வட்டுவாகல் கடற்படைமுகாம் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் 657 ஏக்கர் காணிகளில் சுமர் 380 ஏக்கர் வயல் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விடுவிக்கப்படாத வயல் நிலங்கள் தற்பொழுது பற்றைக்காடுகளாக மாறியுள்ளன.
இதேவேளை பிலக்குடியிருப்பு விமானப் படையினரிடம் இருந்து மீட்கப்பட்ட 20 ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயிகள் இம்முறை காலபோக நெற்செய்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் ஜனநாயக போராட்டத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு முற்பகுதியில் பிலக்குடியிருப்பு மற்றும் வாவெட்டிப் பகுதி வயல் நிலங்களை விமானப்படையினர் பொதுமக்களிடம் கையளித்துள்ளனர்.
இதேவளை வட்டுவாகல் பகுதி மக்கள் கடற்படையினர் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலும் வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
380 ஏக்கர் வயல் நிலங்களை பற்றைக்காடுகளாக்கிய கடற்படையினர் -
Reviewed by Author
on
October 24, 2019
Rating:

No comments:
Post a Comment