6000 பேர் கைது! போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து உச்சகட்ட போராட்டம்..
தென் அமெரிக்க நாடான சிலியில் சமீபத்தில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது மாணவர்கள், பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டன.
இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. அதனை கட்டுப்படுத்த ராணுவத்தினர் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், போராட்டம் குறித்து சிலியின் ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா கூறும்போது, நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதிய உயர்வு மற்றும் சீரான மின்கட்டணத்தை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், இதனை உடனடியாக அமலுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்திய ஜனாதிபதி சிலர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
6000 பேர் கைது! போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து உச்சகட்ட போராட்டம்..
Reviewed by Author
on
October 25, 2019
Rating:
No comments:
Post a Comment