அண்மைய செய்திகள்

recent
-

முதிர்ச்சியடைந்த தந்தையை பராமரிக்காமையால் நான்கு பிள்ளைகளுக்கு மன்னார் நீதிமன்றில் ஆஐராக அழைப்பானை

மன்னார் மாந்தை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அடம்பன் பகுதியில் நான்கு
பிள்ளைகளின் தந்தையான முதியவர் (வயது 96) ஒருவரை அவர்களின் பிள்ளைகள் கைவிட்டமையால் அவர் குளீர் காற்றிலும் மழையிலும் தெருக்களில் அநாதையாக இருப்பதைக்கண்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து முதியவரின் பிள்ளைகளுக்கு மன்று அழைப்பானை விடுத்துள்ளது.

இவ் சம்பவம்பற்றி தெரியவருவதாவது மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் இரண்டு பெண்கள் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 96 வயதுடைய முதியவர் ஒருவர் தள்ளாடும் வயதிலும் தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து தனது வாழ்க்கை செலவை சமாளித்து வந்துள்ளார்.

ஆனால் இவரின் பிள்ளைகள் இவரை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளாமையால் சில நாட்களாக இவர் வயது முதிர்ச்சி மற்றும் இயலாமை காரணமாக ஆங்காங்கே அமைக்க்பட்டிருக்கும் பஸ் தரிப்பிடங்களில் உறங்கிவரும் நிலையில் இருந்து வருகின்றார்.

அத்துடன் அப்பகுதியிலுள்ள ஒருசில நல்லுள்ளங்கள் இவருக்கு உணவுகள் வழங்கி உதவியும் வருகின்றார்கள். இந்த நிலையை அவதானித்து வந்த முன்னாள் வடமாகாண அமைச்சரும் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி கௌமிகா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோள்சன் ஆகியோர் இவ் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் முதியோர் சார்பாக மன்னார் நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றை வியாழக் கிழமை (24.10.2019) தாக்கல் செய்தனர்.

வயோதிபரின் முதுமை நிலை மற்றும் இயலாமையினையும் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை எற்றுக்கொண்டு முதியவரின் பிள்ளைகளான பிரதிவாதிகளை மன்றில் தோன்றுமாறு கட்டளைப் பிறப்பித்துள்ளார்.

சட்டத்தரனிகளால் மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் இவ்
வழக்குக்கு வழங்கப்படும் தீர்ப்பானது பெற்றோரை பராமரிக்காமல் கைவிடுகின்ற பிள்ளைகளுக்கு அது ஓர் பாடமாக அமையவேண்டுமென என
சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இவ் வழக்கை எதிர்வரும் 07.11.2019 அன்று விசாரனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதிர்ச்சியடைந்த தந்தையை பராமரிக்காமையால் நான்கு பிள்ளைகளுக்கு மன்னார் நீதிமன்றில் ஆஐராக அழைப்பானை Reviewed by Author on October 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.