துபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியா தாத்தா
துபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியாவை சேர்ந்த தாத்தா.
துபாய் விமான நிலையத்தில் 123 வயதுடைய இந்தியாவை சேர்ந்த தாத்தா சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுவாமி சிவானந்தா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாய்க்குப் பயணம் செய்துள்ளார்.
பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் அவர்களது ஆவணங்களை சரிபார்த்த பின்பே அந்த நாட்டிற்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவர்.
அப்படியாகத் துபாய்க்குச் சுவாமி சிவானந்தா சென்றதும் அவரது ஆவணங்களைப் பார்த்த அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் ஆடிப்போய்விட்டனர்.அதற்கு என்ன காரணம் தெரியுமா? அவரது வயது தான். அவரது ஆவணத்தில் அவரது பிறந்த ஆண்டு 1896 என அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படி பார்த்தால் அவருக்கு தற்போது 123 வயதாகும், இத்தனை வயதுள்ள ஒருவர் விமானத்தில் பயணித்து ஆரோக்கியமாக இருப்பதைப் பார்த்து பலர் அதிசயித்தனர்.
விமான நிலையத்தில் உள்ள பலர் அவரிடம் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

துபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியா தாத்தா
Reviewed by Author
on
October 09, 2019
Rating:

No comments:
Post a Comment