வித்தியாசமான உலக சாதனை படைத்த ரஹானே!
ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ரஹானே அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து மிரட்டிய அவர், 195 பந்துகளில் 115 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு 11வது டெஸ்ட் சதம் ஆகும்.
இந்த கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் ரஹானே புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதாவது, இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் 200 முறை பிற வீரர்களுடன் ஜோடி விளையாடியுள்ளார்.
இந்த 200 முறையும் ரஹானேவோ அல்லது அவருடன் ஜோடி சேர்ந்த வீரரோ, ஒருமுறை கூட ரன் அவுட் ஆனதில்லை. இந்த வித்தியாசமான புதிய உலக சாதனையை ரஹானே படைத்துள்ளார்.

வித்தியாசமான உலக சாதனை படைத்த ரஹானே!
Reviewed by Author
on
October 21, 2019
Rating:
No comments:
Post a Comment