மன்னார் வெற்றிச்செல்வியின் குப்பி சிறுகதை நூல் கம்போடியாவில் வெளியீடு--படங்கள்
கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் 21/22-09.2019 ஆரம்பமாகிய இரண்டு நாள் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் ஈழத்துப் படைப்பாளி எழுத்தாளரும் கவிஞருமாகிய வெற்றிச்செல்வியின் குப்பி என்ற சிறுகதை நூல் வெளியிடப்பட்டுள்ளது.
'குப்பி' சிறுகதை நூலை நூலாசிரியர் நிகழ்வில் கலந்து கொண்ட ஈழத்து கவிஞர்கள் படைப்பாளிகள் சார்பில் வெளியிட்டு வைக்க கம்போடிய அங்கோர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் செயலாளர் ஆகியோர் நூலின்; பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.போர்க்கால வாழ்க்கையைப் பற்றிய 30 சிறுகதைகளை குப்பி சிறுகதைத் தொகுப்பு உள்ளடக்கி உள்ளது.
குப்பி நூல் வெளியீடு சில வார்த்தைகளே சொல்லக் கிடைத்த பெரும் மேடை. ஈடிணையற்ற தியாக வீரர்களின்_வரலாற்றுத்துளிகளைத் தாங்கிய_குப்பி நூலை வெளியிடும்போது ஈழப்படைப்பாளிகள் என்னுடன் மேடையில் நின்றார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வெளியீட்டின்போது அன்பும் கனிவுமாக தோள் மீது கை வைத்து ஆதரவு உணர்வை வெளிப்படுத்திய சித்தர் திருத்தணிகாசலம் அவர்களது கனிந்த நன்றியும் கம்போடிய நாட்டு கலாசார அமைச்சர் சொக்கையா அவர்களது தமிழ் நன்றியும் புத்துணர்வை தந்தது.
வெளியிட்டாேர் ரஞ்சுதமலர்அவர்களுடன் ஈழத்துப்படைப்பாளர்கள்
நூலை பெற்றுக்காெண்டாேர்
அங்காேர் தமிழ்ச் சங்கத்தின் தலைவருடன் செயலாளர்
அங்காேர் தமிழ்ச்சங்கம்
பன்னாட்டுத் தமிழர் நடுவம்
கம்பாேடியா இந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றையும் சேர்ந்த 350 கவிஞர்களும், பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வெற்றிச்செல்வியின் குப்பி சிறுகதை நூல் கம்போடியாவில் வெளியீடு--படங்கள்
Reviewed by Author
on
October 01, 2019
Rating:

No comments:
Post a Comment