ஈழமதில் புத்துயிர்த்துத் துளிர்க்க---வெற்றிச்செல்வி
ஈழமதில் புத்துயிர்த்துத் துளிர்க்க.....
தேனுக்கிணை உறவுகளே
தீந்தமிழ் வணக்கம்
பாவுக்கணை பாேட்டுப்
பகிர வந்தேன் சிறு துளிகள்.
வானதி கஸ்தூரி அம்புலி மலைமகளை நிகர்த்தாெரு கவிபடைக்க முடியாதென் வாழ்நாளில்.
துவக்காேசை ஓய்ந்து
ஆண்டுகள் பத்து.
துவங்காத வாழ்வில்
ஆசைகள் நூறு
வருவானா என்னுடைய
காணாமல் பாேன மகன்
உயிராேடு எங்கேணும்
இருப்பானா என் கணவன்
தாய்களது கண்ணீரில்
கரைகிறது என் தேசம்.
எனினும்
வாடிய மல்லிகையாயும்
மணக்கின்ற என் தேசம்
வெள்ளைச் சேலை தான்
உற்றுப் பாருங்கள்
சேலை முழுதும் வெள்ளைப் பூக்கள்
எனச்சிரித்து நகர்கிறாள்
கணவனைத் தேடாத காரிகை
தன் செல்ல மகள் கை பிடித்து
அங்கம் இழந்தாேர் பல
ஆயிரம் வலிகள் எழ
உரிமைக்காய் குரல் எழுப்பி
ஓய்ந்தும் கிடக்கின்றார்.
எனினும்
பாேருழுத நிலம் மீதில்
பாெய்க்காலைப் பூட்டிக்காெண்டு
விதைப்பாெதிகள் எறியும் தாேழன்
கானகம் செய்கின்றான்
சூரியக் கதிர் வெம்மை
சுட்டெரிக்கா உலகம் வேண்டி
அகன்ற பெருங் கானகமே
அன்றலர்ந்த நினைவுகளே
இன்றுலரும் மல்லிகையும்
உரம்தான் உன் வேரில்
பூ வளர்க்கும் கனவுகளில்
பூத்த பெரும் காதலெலாம்
கருகிப் பாேனது வீண் ஆகவென்று
யார் சாென்னார்
ஈழமதில்
புத்துயிர்த்துத் துளிர்க்க
ஊற்றுக்கண் திறக்கிறது
புத்தெழுச்சி பெறுகிறது
மனம் மதித்தல் அன்பு
வனம் வளர்த்தல் பேரன்பு
பேரியற்கை வாழ்வு தரும்
பெருவாழ்வு வாழ்க நீங்கள்.
கம்பாேடியா பன்னாட்டுத் தமிழர் நடுவம் அங்காேர் தமிழ்ச்சங்க
உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் கவிதை வெற்றிச்செல்வி
தேனுக்கிணை உறவுகளே
தீந்தமிழ் வணக்கம்
பாவுக்கணை பாேட்டுப்
பகிர வந்தேன் சிறு துளிகள்.
வானதி கஸ்தூரி அம்புலி மலைமகளை நிகர்த்தாெரு கவிபடைக்க முடியாதென் வாழ்நாளில்.
துவக்காேசை ஓய்ந்து
ஆண்டுகள் பத்து.
துவங்காத வாழ்வில்
ஆசைகள் நூறு
வருவானா என்னுடைய
காணாமல் பாேன மகன்
உயிராேடு எங்கேணும்
இருப்பானா என் கணவன்
தாய்களது கண்ணீரில்
கரைகிறது என் தேசம்.
எனினும்
வாடிய மல்லிகையாயும்
மணக்கின்ற என் தேசம்
வெள்ளைச் சேலை தான்
உற்றுப் பாருங்கள்
சேலை முழுதும் வெள்ளைப் பூக்கள்
எனச்சிரித்து நகர்கிறாள்
கணவனைத் தேடாத காரிகை
தன் செல்ல மகள் கை பிடித்து
அங்கம் இழந்தாேர் பல
ஆயிரம் வலிகள் எழ
உரிமைக்காய் குரல் எழுப்பி
ஓய்ந்தும் கிடக்கின்றார்.
எனினும்
பாேருழுத நிலம் மீதில்
பாெய்க்காலைப் பூட்டிக்காெண்டு
விதைப்பாெதிகள் எறியும் தாேழன்
கானகம் செய்கின்றான்
சூரியக் கதிர் வெம்மை
சுட்டெரிக்கா உலகம் வேண்டி
அகன்ற பெருங் கானகமே
அன்றலர்ந்த நினைவுகளே
இன்றுலரும் மல்லிகையும்
உரம்தான் உன் வேரில்
பூ வளர்க்கும் கனவுகளில்
பூத்த பெரும் காதலெலாம்
கருகிப் பாேனது வீண் ஆகவென்று
யார் சாென்னார்
ஈழமதில்
புத்துயிர்த்துத் துளிர்க்க
ஊற்றுக்கண் திறக்கிறது
புத்தெழுச்சி பெறுகிறது
மனம் மதித்தல் அன்பு
வனம் வளர்த்தல் பேரன்பு
பேரியற்கை வாழ்வு தரும்
பெருவாழ்வு வாழ்க நீங்கள்.
கம்பாேடியா பன்னாட்டுத் தமிழர் நடுவம் அங்காேர் தமிழ்ச்சங்க
உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் கவிதை வெற்றிச்செல்வி
ஈழமதில் புத்துயிர்த்துத் துளிர்க்க---வெற்றிச்செல்வி
Reviewed by Author
on
October 01, 2019
Rating:

No comments:
Post a Comment