மன்.அல்.அஷ்ஹர் தேசியப்பாடசாலை வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக சில கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் நீரி மூழ்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாக கடும் மழை பெய்து வரும் நிலையில் 15/10/2019 செவ்வாய்க்கிழமை மாலை 2 மணியளவில் கடும் மழை பெய்தது.
இதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள குளங்கள் , கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் மழை நீரில் நிறைந்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக மேலதிக நீர் அனைத்தும் மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளுக்குள் சென்றுள்ளது.
மன்.அல்.அஷ்ஹர் தேசியப்பாடசாலை வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது மழையின் காரணமாக பாடசாலை மைதானம் வகுப்பறைகள் நூலகம் களஞ்சிய அறை பொது மண்டபம் என பலபகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளமையால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வகுப்பறைக்குள்ளும் இருக்க முடியாத நிலை வெளியுலும் நிற்கமுடையாத நிலை குறிப்பாக ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வகுப்பறைகளில் தான் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.
வெள்ளம் காரணமாக அதிபரிடம் வினாவியபோது
பாடசாலை பிரதான வீதியில் இருந்து சற்று தாழ்வாக இருப்பதாலும் மைதானம் மற்றும் சில வகுப்பறைகள் பள்ளப்பகுதியில் இருப்பதாலும் இப்படியான தொடர்ச்சியான சில மணிநேர மழையில் வெள்ளம் இலகுவாக வந்துவிடும் பாடசாலையை அண்டியுள்ள வட்டக்குளம் நிறைந்து வெள்ளம் வெளியேறுவதற்கு வாய்க்கால் ஒழுங்கான வடிகால் வசதியின்மை காரணம்.
இப்படியாக மழை தொடருமானால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி பாடசாலை கல்விச்செயற்பாடுகள் இன்றி விடுமுறை தான் வழங்கவேண்டும் வேறு வழியில்லை....
சம்மந்தப்பட்டவர்கள் விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவ மாணவிகள் நனைந்த புத்தகப்பைகளுடன் பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டும் ஆசிரியர்கள் தமது வாகனங்களை பாடசாலையிலே விட்டுவிட்டு முச்சககரவண்டியிலும் நடந்து சென்றமையும் காணக்கூடியதாக இருந்தது.


மன்.அல்.அஷ்ஹர் தேசியப்பாடசாலை வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது-படங்கள்
 
        Reviewed by Author
        on 
        
October 16, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 16, 2019
 
        Rating: 








No comments:
Post a Comment