அன்று 12 கை விரல் 20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை... இன்று சூனியக்காரி! பரிதாப பின்னணி -
ஒடிசாவின் Ganjam பகுதியை சேர்ந்தவர் Kumar Nayak. 63 வயதான இவர் பிறக்கும் போதே 12 விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்துள்ளார்.

தற்போது 63 வயதாகும் இவர் மிகுந்த வேதனையுடன், நான் பிறக்கும் போதே இதே போன்று தான் பிறந்தேன். எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் சிகிச்சை செய்ய முடியவில்லை.
ஒரு சில நேரங்களில் நான் இதை நினைத்து மிகுந்த வேதனையடைந்ததுண்டு, 63 வயதாகும் நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு சாதரண வாழ்க்கை வாழவில்லை, என்னுடைய உறவினர்கள் நான் ஒரு சூனியக்காரி என்று ஒதுக்கி வைக்கிறார்கள், என்னுடைய இந்த அரிய நிலை காரணமாக நானே சிலரிடம் என்னை விட்டு விலகி இருங்கள் என்று கூறியிருக்கிறேன்.

என்னிடம் சிலர் நெருங்கி வந்து பார்ப்பதற்கே பயப்படுவர், இதன் காரணமாகவே நான் வீட்டுக்குள்ளே அடங்கி கிடப்பேன். ஒரு சிலர் என்னை அனுதாபத்தின் அடிப்படையில் பார்க்க வருவர், வீட்டிக்குள்ளே இருப்பேன், வித்தியாசமாக உறவினர்களால் நடத்தப்படுவேன் என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

உறவினர் ஒருவர் இவரின் நிலை குறித்து கூறுகையில், இது ஒரு பிரச்னை இல்லை, சரி செய்துவிடலாம் என்று தெரியும், ஆனால் அந்தளவிற்கு எங்களிடம் வருமானம் இல்லை, அவளுக்கு சிகிச்சை அளிக்கக்கூட முடியாத நிலைக்கு இருக்கிறோம் என்று வருந்ததிய காலங்கள் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

அன்று 12 கை விரல் 20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை... இன்று சூனியக்காரி! பரிதாப பின்னணி -
Reviewed by Author
on
November 24, 2019
Rating:
No comments:
Post a Comment