மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு ராஜிதவினால் உபகரணங்கள் வழங்கி வைப்பு -
மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு 162 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் உபகரணங்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும் என நாடாளுமன்றில் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனால் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நேரடியாக கோரிக்கை விடுக்கபட்டது.
இதன்பிரகாரம் 162 மில்லியன் பெறுமதியான CT Scanner, US Scanner, anesthesia machine, infant warmer உட்பட 6 உபகரணங்களை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்படி உபகரணங்கள் இன்மையால் பொதுமக்கள் பலர் அசௌகரியங்களையும், உயிரிழப்புக்களையும் சந்தித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு ராஜிதவினால் உபகரணங்கள் வழங்கி வைப்பு -
Reviewed by Author
on
November 14, 2019
Rating:

No comments:
Post a Comment