கல்
கல்
வாழக் கல்
வாழும் கல்
வாழ்க்கையே கல்
வாழாட்டி நீ கல்
கலங்காமல் இருக்க…
காலத்தை வெல்ல கல் - உன்
காலத்தை சொல்லும் கல்
கடைசி நேரம் வருவதும் கல்
கல்லில் பல…
கண்ணில் பல…
பெண்ணில் பல…
உன்னில் சில…
மாணிக்கம்
வைரம்…
இரத்தினம்… எல்லாமே கல்
இறுதியில் அடிக்கல்
கல்லில் உள்ள சொல்
காலத்தை சொல்லும் கல்
கல்லில் விடை(ல) –நீ
காலத்தின் சிலை-கல்
மலை மாலை- விழ கல்
வாயிற் படியே கல்
வாயினுள்ளும் கல்--சிலர்
வார்த்தையும் கல்
கல்லாமல் கல்லாய் சிலர்
கல்லில் கடவுளை காணும் பலர்
கல்மனம் கொண்டவரும் இங்கு உலர்
கல்லும் கனியாய் மாறும் மலர்....
கவலைகள் இல்லைனா - நீ கல்லு
கல்லாக இருப்பதில் பிரியோசனமா நீ சொல்லு
காலத்தை வெல்லு - நீ
கலியுகத்தில் கம்பீரமாய் நில்லு….
-கவிஞர் வை-கஜேந்திரன்BA-
கல்
Reviewed by Author
on
November 24, 2019
Rating:

No comments:
Post a Comment