அண்மைய செய்திகள்

recent
-

உலக நாடுகளில் இருந்து இவை ஒழிக்கப்பட வேண்டும்: நாகசாகியில் போப் பிரான்சிஸ் உருக்கம் -


ஜப்பான் நகரமான நாகசாகியில் அணு ஆயுதங்களை ஒழிக்கும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார் கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அணு குண்டு வீசிய இரண்டு ஜப்பான் நகரங்களில் நாகசாகியும் ஒன்று.
1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த அணு குண்டு தாக்குதலில் குறைந்தது 74 ஆயிரம் பேர் நாகசாகியில் மட்டும் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து நான்கு நாள் பயணமாக போப் பிரான்சிஸ் சனிக்கிழமை ஜப்பான் வந்து சேர்ந்தார். ஜப்பானுக்கு வருகை தரும் இரண்டாவது போப் இவர்.
இதனைடையே நாகசாகியில் இறந்தவர்கள் நினைவாக நடந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் போப் பங்கேற்றார்.
சோகம் ததும்பும் நிகழ்வில் பேசிய போப், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை நிபந்தனையின்றி கண்டித்தார்.



மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது ஏற்படுத்த வல்ல பயங்கரம் மற்றும் வலியை இந்த இடம் ஆழமாக நினைவுபடுத்துகிறது என்று தெரிவித்தார்.
அணு குண்டுகளை தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துவதையும் அவர் விமர்சித்தார். "ஒருவரை ஒருவர் அழிப்பது பற்றிய பயமும், மொத்தமாக அழிந்துபோவது பற்றிய அச்சுறுத்தலும் உலக அமைதிக்கு உதவாது" என்று அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் வீணாக்கப்படும் பணம் பற்றியும் போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார்.
அவநம்பிக்கை மிகுந்த சூழல் அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு முயற்சிகளை கெடுக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாகசாகியில் போப் பேசுவதைக் கேட்க கொட்டும் மழையில் பல நூறு பேர் கூடியிருந்தனர். நாகசாகி அணு குண்டு தாக்குதலில் தப்பிப் பிழைத்த இருவர் மலர் வளையத்தை எடுத்து போப்பிடம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் இருந்து இவை ஒழிக்கப்பட வேண்டும்: நாகசாகியில் போப் பிரான்சிஸ் உருக்கம் - Reviewed by Author on November 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.