தமிழக அரசு பேரறிவாளனுக்கு பிணை!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும், திங்கட்கிழமை பேரறிவாளன் பிணையில் வெளியே வருகிறார்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பிணை வழங்கி சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி செய்துள்ளார். ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளவர்களுக்கு சிறை விதிகளின்படி வழங்கப்படும் பிணைதான் இது.
கடந்த 2017ம் ஆண்டு பேரறிவாளன் பிணையில் வெளியே வந்தார். தற்போது அந்தப் பிணைக்கு பிறகு 2 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து விட்டதால் மீண்டும் ஒருமுறை 30 நாட்கள் பிணை கிடைத்துள்ளது.
இந்த 30 நாட்கள் என்பது அவர் விருப்பப்படும் நாட்களிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விதிகளுக்கு அப்பாற்பட்டு பேரறிவாளன் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது என சிறைத்துறை அவருக்கு நிபந்தனை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பேரறிவாளனுக்கு பிணை!
Reviewed by Author
on
November 08, 2019
Rating:

No comments:
Post a Comment