சம்பந்தனுக்கு சஜித் வழங்கிய உறுதிமொழி -
ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்று சஜித் பிரேமதாச உறுதியளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும். ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சஜித் பிரேமதாசவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது.
அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.
சம்பந்தனுக்கு சஜித் வழங்கிய உறுதிமொழி -
Reviewed by Author
on
November 08, 2019
Rating:
Reviewed by Author
on
November 08, 2019
Rating:


No comments:
Post a Comment