உலகில் 2019-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதித்த டாப் 5 பிரபலங்கள்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதத்தின் போது, 2019-ஆம் ஆண்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள், மறக்க முடியாத துயரங்கள் போன்றவைகள் வெளியிடப்படும்.
அதே போன்று சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கப்படும் பிரபலங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும், அந்த வகையில் 2019-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சாம்பாதித்த பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் கால்பந்து உலகின் ஜாம்பவனான கிறிஸ்டயன் ரொனால்டோ முதல் இடத்திலும், லியோன் மெஸ்ஸி 2-வது இடத்திலும், அமெரிக்க மொடல் Kendall Jenner 3-வது இடத்திலும், நான்காவது இடத்தில் லண்டனை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் David Beckham, 5-வது இடத்தில் அமெரிக்க பாடகி(பாப் சிங்கர்)Selena Gomez-ம் உள்ளார்.
இவர்களை தொடர்ந்து கால்பந்து வீரர் நெய்மர் 6-வது இடத்திலும், இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி 11-வது இடத்திலும் உள்ளனர்.
Cristiano Ronaldo
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டில், அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்களின் வரிசையில் இருப்பவர் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் Cristiano Ronaldo. இவரை இன்ஸ்டாகிராமில் 194 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர்.
இந்த இந்த ஆண்டில் மட்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் 38.2 மில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளார்.
இந்த ஆண்டில் இவர் விளம்பரம் தொடர்பாக 49 புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் குறிப்பாக Nike football boots, CR7 Play it Cool போன்றவைகள் அடங்கும்
Lionel Messi
கிறிஸ்டியன் ரொனால்டோவுக்கு எப்படி கால்பந்து உலகில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போன்று அவருக்கு கிட்டத்தட்ட நிகராக ரசிகர்களின் எண்ணிக்கை வைத்திருப்பவர் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் Lionel Messi. இவர் இந்த ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் 18.7 மில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளார்.
139 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ள இவர் ஒரு விளம்பர் பதிவேற்றத்திற்கு 518,000 பவுண்ட் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kendall Jenner
அமெரிக்க மொடலான Kendall Jenner(24), உள்ளாடை நிறுவனங்களை விளம்பரபடுத்துவார். இவர் இந்த ஆண்டு மட்டும் 12.7 மில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளார்.
இந்த ஆண்டு 26 விளம்பரம் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளதாகவும், அதில் ஒரு விளம்பர புகைப்படத்திற்கு 489,000 பவுண்ட் வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
David Beckham
Selena Gomez

அமெரிக்க பாப் ஸ்டாரான Selena Gomez(27)-ஐ இன்ஸ்டாகிராமில் 164 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர புகைப்பட பதிவேற்றத்திற்கு 709,000 பவுண்ட் வாங்குகிறார்.
Neymar
பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டும் 5.8 மில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளதாகவும், இவர் ஒரு பதிவேற்றத்திற்கு சராசரியாக 57800 வரை வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் 2019-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதித்த டாப் 5 பிரபலங்கள்!
Reviewed by Author
on
December 29, 2019
Rating:
No comments:
Post a Comment