அனைத்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் - ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை! -
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, மொரட்டுவ பிரதேச பிரபல பாடசாலையின் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். “அனைத்து பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தேவையற்ற, தனிப்பட்ட நன்மைகளை பெற்றுக்கொள்ள தனது பெயரை பயன்படுத்தும் நபர்கள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துமாறு” ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் - ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை! -
Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment