மன்னார் நகரில் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகர அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட சுமார் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபையில் பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
-மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் உப தலைவர்,உறுப்பினர்கள்,மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்க பிரதி நிதிகள்,நகர திட்டமிடல் அதிகார சபை உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-இதன் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகர அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட சுமார் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சந்தை கட்டிட தொகுதி அமைத்தல்,வாகன தரிப்பிடம் அமைத்தல்,கடைத்தொகுதி அமைத்தல் உள்ளிட்ட மூன்று அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு ,ஆலாசனைகளும் முன் வைக்கப்பட்டது.
இதே வேளை மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட வடிகான் அமைப்பு வேளைத்திட்டம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளதோடு, எதிர் காலங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான தமது ஆலோசனைகளையும் முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் உப தலைவர்,உறுப்பினர்கள்,மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்க பிரதி நிதிகள்,நகர திட்டமிடல் அதிகார சபை உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-இதன் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகர அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட சுமார் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சந்தை கட்டிட தொகுதி அமைத்தல்,வாகன தரிப்பிடம் அமைத்தல்,கடைத்தொகுதி அமைத்தல் உள்ளிட்ட மூன்று அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு ,ஆலாசனைகளும் முன் வைக்கப்பட்டது.
இதே வேளை மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட வடிகான் அமைப்பு வேளைத்திட்டம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளதோடு, எதிர் காலங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான தமது ஆலோசனைகளையும் முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகரில் 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு-
Reviewed by Author
on
December 23, 2019
Rating:

No comments:
Post a Comment