கலாபூஷணம் விருது பெற்ற செழுங்கலை வித்தகர் செபஸ்தியான் சீமான்-படங்கள்
கலாபூஷணம் விருது பெற்ற செபஸ்தியான் சீமான்.
கொழும்பு தாமரை தடாகத்தில் சனிக்கிழமை 15.12.2019 அன்று நடைபெற்ற 35 வது கலாபூஷண விருது வழங்கும் விழாவில் இலங்கை வாழ் 200 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் 170 சிங்கள கலைஞர்கள் 20 தமிழ் கலைஞர்கள் 10 முஸ்லிம் கலைஞர்கள் அடங்குவர். அவர்களில் மன்னார் மாவட்டம் சார்பாக முருங்கனின் மூத்த கலைஞர் செழுங்கலை வித்தகர் திரு.செபஸ்தியான் சீமானுக்கு கலாபூசண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பதினொரு வயதில் சந்தியோகுமையோர் நாடகத்தில் குமாரனாக அரங்கேறியவர் இன்று 96வயதை எட்டிப் பிடித்தும் நடிப்புத்துறையில் குமாரனாகவே தன்னை வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பும் தியாகமும் கலை ஈடுபாடும் கொண்ட இவரை பாராட்டாமல் இருக்க முடியாது. அரசனாக மந்திரியாக முனிவராக மருத்துவச்சியாக பெண் நடிகராக நகைச்சுவை கதாபாத்திரங்களாக அரங்கை களை கட்ட வைத்து தனக்கென இரசிகர் வட்டத்தையே உருவாக்கியவர். பின்னணி பாடகராக மத்தளம், கைமணி இசைக்கருவிகள் இசைப்பவராக தன்னை வெளிப்படுத்தியவர்.
எளிமையும் நசைச்சுவைப்பண்பும் உழைத்து வாழ வேண்டும் என்று ஓர்மமும் கொண்ட ஓர் கலைத் தவசி. இவரது தந்தை மற்றும் பெரிய தந்தை ஆகியோர் முறையே அண்ணாவியும் புலவருமாவர். இவரது இரு தம்பிகளான திரு. செபமாலை குழந்தை மற்றும் திரு. மாசிலாமணி ஆகியார் ஏற்கனவே கலாபூசண விருதுகளை பெற்ற கலைஞர்களாவார். கலைக் குடும்பத்தில் ன் மூத்தவர் கலாபூசணம் திரு. சீமான். முருங்கன் முத்தமிழ் கலாமன்ற வாழ்நாள் உறுப்பினர் .
கலைப்பாரம்பரியத்தில் வந்த 03 கலைஞர்களும் கலாபூஷண விருது பெற்றிருப்பது சிறப்பான விடையம் அதிலும் இந்த 03 கலாபூஷணங்களையும் நியூமன்னார் இணையத்தின் மூலம் செவ்வி கண்டு அவர்களின் கலைச்சேவையினை எமது இணையத்தின் மூலம் வெளிப்படுத்தி நாமும் கௌரவப்படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்குரிய சிறப்பான விடையம் 03 கலைஞர்களுக்கும் நியூமன்னார் இணைய குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டும்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்BA

கலாபூஷணம் விருது பெற்ற செழுங்கலை வித்தகர் செபஸ்தியான் சீமான்-படங்கள்
Reviewed by Author
on
December 23, 2019
Rating:

No comments:
Post a Comment