ஆபாச படங்கள் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? கனடாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பகீர் தகவல் -
உலகின் மிகப்பெரிய இலவச ஆபாச தளம், 2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 33.5 பில்லியனுக்கும் அதிகமான முறை தேடப்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இந்நிலையில் ஆபாச படங்கள் பார்த்தால் என்னென்ன பாதிப்பு வரும் என கனடாவின் லாவல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னே பாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஆபாச படங்கள் பார்ப்பது பல்வேறு நரம்பியல் பிரச்னைகளுக்கு வழிவகுப்பதால், மனஉளைச்சல் முதல் பாலியல் வாழ்க்கையில் பாதிப்புகள் வரை அடுக்கடுக்கான நரம்பியல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன
தனிமனிதனின் ஒழுக்கம், மன உறுதி மற்றும் பாலியல் இச்சைகளை மூளையில் உள்ள prefrontal cortex பகுதி கட்டுப்படுத்துகிறது.
குழந்தைகளில் இந்த பகுதி வளர்ச்சியடையாமல் இருக்கும். இதனாலேயே குழந்தைகளால் சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆனால் இளம் வயதினர் ஆபாச வீடியோக்களைப் பார்க்கும்பொழுது, இந்த கார்டெக்ஸ் பகுதியும் பாதிக்கப்படுகிறது.
இதனால் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவர்கள் மாறிவிடுவார்கள். எனவே, ஆபாசப்படங்களை பார்க்கும் வயது வந்தவர்கள் மனதளவில் முடிவெடுக்க முடியாத சிறுவர்களாகவே, இருப்பார்கள் என்றும் கண்டறிந்துள்ளார்.
ஆபாசப்படங்களை பார்ப்பதால் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கும் அது தூண்டுகோலாக இருக்கும் என்றும், ஒருகட்டத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ஆபாசப்படங்களுக்கு நமது மூளை அடிமையாகிவிடும் என்றும் அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆபாச படங்கள் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? கனடாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பகீர் தகவல் -
Reviewed by Author
on
December 11, 2019
Rating:

No comments:
Post a Comment