அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் பத்து அம்மாச்சி உணவகம் அமுலாக்கப்பட்டு வருகின்றன-வட மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார்

குடும்ப பெண்களை தலைமைத்துவம் கொண்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதுடன் மன்னார் வாழ் மக்கள் போஷhக்கு உணவை பெற்றுக்கொள்ளும் நோக்கம் கொண்டு அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பத்து அம்மாச்சி உணவகம் அமுலாக்கப்பட்டு வருகின்றன. என வட மாகாண விவசாய
பணிப்பாளர் எஸ்.சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

திங்கள் கிழமை (23.12.2019) மன்னாரில் அம்மாச்சி உணவக திறப்பு விழா
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில்
இடம்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில் மன்னாருக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். நீண்டகாலமாக பலரால்
எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்மாச்சி உணவகம் இன்று (23.12.2019) இங்கு
திறக்கப்படுகின்றது.

-வட மாகாணத்தில் பத்து இந்த அம்மாச்சி உணவகம் அமைச்சின் மற்றும் இதன் திணைக்கள அனுசரனையுடன் அமுலாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதில் ஐந்து உணவகம் திறக்கப்பட்டுள்ளன.

-இதில் கடந்த ஆண்டு  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனுசரனையுடன் ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டே இவ் திட்டம் இங்கு ஆரம்பிக்க்பட்டது.

-வட மாகாணத்தில் இவ் அம்மாச்சி உணவக திட்டத்துக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்து மில்லியன் ரூபாவே இவ்
கட்டிடத்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.

-பிரமாண நன்கொடை  திட்டத்தின் கீழ் 1.25 மில்லியன் ரூபாவும் அத்துடன்
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாவும்
இதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

-இவ்விடத்தில் இவ் கட்டடிடத்தை அமைக்க மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இக்காணியை எமக்கு ஒதுக்கி தந்துள்ளார். அவருக்கு நாம் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளோம்.

-அத்துடன் மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் நகர சபைக்கும்
நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். இவர்களுடன் மன்னாரில் நீர்பாசன
எந்திரிகளாக கடமைபுரிந்த புரிகின்றவர்கள் இவ் கட்டிடத்தை அமைத்துதர
பலவிதத்திலும் உதவிகள் புரிந்துள்ளனர்.

-இந்த அம்மாச்சி உணவகத்தில் சமையல் கடமைகள் புரிவதற்கு நாங்கள் முப்பது பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கியுள்ளோம். அதாவது பாரம்பரிய உணவுகள் மற்றும் போசன உணவுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதைப்பற்றியே பயிற்சி
வழங்கப்பட்டுள்ளது.

-இவர்கள் இதை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் இவர்களை வெளி மாவட்டங்களிலுள்ள அம்மாச்சி உணவங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளோம்.

-இதன் மூலம் இவர்களுக்கு அதற்கான அறிவு, திறன், மற்றும் மனப்பாங்கினை
மாற்றுவதற்கான இவ் செயல்பாட்டை நாங்கள் மேற்கொண்டோம்.

-இதன் மூலம் இவ் திட்டம் இங்கு சிறந்த முறையில் நடைபெறும் என்பது
எங்களுக்கு நம்பிக்கை. இந்த முப்பது பேரையும் நாங்கள் இரு குழுவாக
பிரிக்கப்பட்டு காலையிலும் மாலையிலும் செயல்படவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

-குடும்ப தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருவதால் இவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டே இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

-அடுத்து இவ் வாழ் மக்கள் போசன உணவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கமும் இவ் திட்டமிடலில் இருந்தது.

-ஏனைய மாவட்டங்களில் இவை சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு மன்னாரிலும் இது சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.


வட மாகாணத்தில் பத்து அம்மாச்சி உணவகம் அமுலாக்கப்பட்டு வருகின்றன-வட மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் Reviewed by Author on December 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.