ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை..! ஒலிம்பிக்.. உலகக் கோப்பை கனவு தகர்ந்தது: சுவிஸ் கூட்டத்தில் அதிரடி முடிவு -
சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடந்த கூட்டத்தில் வாடாவின் நிர்வாகக் குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்தது.
இதன் மூலம் டோக்கியோ 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி, 2022 பிபா கால்பந்து உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகளில் ரஷ்யா கொடி மற்றும் கீதம் அனுமதிக்கப்படாது.
ஆனால் ஊக்கமருந்து மோசடியில் தாங்களுக்கு தொடர்பில்லை என்பதை நிரூபிக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிட முடியும்.
நூற்றுக்கணக்கான ஊக்கமருந்து வழக்குகளை மறைக்க ரஷ்ய அதிகாரிகள் மாஸ்கோ ஆய்வக தரவுத்தளத்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரங்களின் காரணமாக ரஷ்யா மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று வாடா புலனாய்வாளர்கள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை..! ஒலிம்பிக்.. உலகக் கோப்பை கனவு தகர்ந்தது: சுவிஸ் கூட்டத்தில் அதிரடி முடிவு -
Reviewed by Author
on
December 12, 2019
Rating:

No comments:
Post a Comment