தாயின்ஆசையை நிறைவேற்றிய வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி க.தனுசியா
அம்மா தலைநிமிர்ந்து வாழணும் என்பதற்காகவே நான் சாதித்தேன் என வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதல்நிலை பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தனுசியா கணேசன் தெரிவித்துள்ளார்.
வெளியாகிய கல்விப் பொது தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் புவியியல், தமிழ், கிறிஸ்தவ நாகரிகம் பாடத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தனுசியா கணேசன் பெற்றுள்ளார்.
குறித்த மாணவி தனது வெற்றி பற்றி தெரிவிக்கையில்,
நான் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். நான் இருப்பது தவசிக்குளம். பாடசாலையில் இருந்து 7 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.
வானில் தான் பாடசாலை செல்கின்றேன். ரியூசன் வகுப்புக்கு அம்மா, அண்ணா ஏற்றி இறக்குவார்கள். எனக்கு இந்த பெறுபேறு வருவதற்கு கடவுள் தான் காரணம். அவர் கொடுத்த அறிவை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.
அதற்கு பிறகு அம்மா. அம்மா பட்ட கஸ்டம். அம்மாவின் ஆசை. அக்காவும் சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழகம் சென்றார்.
அது போல் நான் போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களும் எனக்கு சிறப்பாக வழிகாட்டியிருந்தார்கள். பாடசாலையில் எனது ஆசிரியர்கள்,எனது நண்பி சஜீவினி ஆகியோருக்கும் நன்றிகள்.
நாங்கள் கஸ்டப்பட்ட குடும்பம் தான். எனக்கு 2005ம் ஆண்டில் இருந்து அப்பா இல்லை. அம்மா அந்த குறை தெரியாது வளர்த்தார். அப்பா இல்லை என்பதைக் கூட சிரித்துக் கொண்டே சொல்வேன்.
ஏனெனில் அம்மா எந்தக் குறையும் வைக்கவில்லை. தான் கஸ்டப்பட்டு வேலை செய்து எம்மை படிக்க வைத்தார். அம்மா தலைநிமிர்ந்து வாழணும் என்பதற்காகவே நான் சாதித்தேன். தொடர்ந்தும் படித்து விரிவுரையாளராக வர வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் தெரிவித்துள்ளார்.

Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment