உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற பெருமையை பெறும் இந்தியாவில் உள்ள மைதானம்! இங்கு நடக்கும் முதல் போட்டி? -
இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதம் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்வரும் 2020 மார்ச்சில் தொடங்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த மைதானத்தில் மூன்று விதமான பிட்சுகள் அமைக்கப்படுகின்றன.
மேலும் இங்கு மிகவும் மேம்பட்ட வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதால் மழை பொழிந்த 30 நிமிடங்களுக்குள்ளாகவே போட்டியை மீண்டும் தொடங்கிவிட முடியும்.

இந்த மைதானத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும்.
அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் தான் உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஆனால் அந்த சாதனையை குஜராத் கிரிக்கெட் மைதானம் தகர்க்கவுள்ளது.
இந்த மைதானத்தில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கிடையில் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்கும் போட்டியே முதல் போட்டியாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற பெருமையை பெறும் இந்தியாவில் உள்ள மைதானம்! இங்கு நடக்கும் முதல் போட்டி? -
Reviewed by Author
on
December 09, 2019
Rating:
No comments:
Post a Comment