பார்வையற்ற ரசிகர்களிடம் 5 நிமிடம் அனுமதி கேட்ட விஜய், கனவு நினைவான நிகழ்வு
தமிழ் திரையுலகில் பல லட்சம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர்.
அண்மையில் கூட விஜய்யின் தீவிரமான பார்வையற்ற கணவன் மனைவி ரசிகர்கள் தனியார் தொலைக்காட்சியில் நடிகர் விஜய்யை நாங்கள் சாவதற்குள் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை தெரிந்து கொண்ட விஜய் அவர்களை நேரில் அழைத்து அரை மணி நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசியுள்ளார்.
அப்படி முதன் முறையாக அவர்கள் விஜய்யை பார்க்க சென்றபோது நடந்ததை கூறியுள்ளனர். "நாங்கள் வெளியே அமர்த்திருந்தோம் அப்போது விஜய் அவர்கள் எங்களிடம் வந்து நான் இப்போது தான் படப்பிடிப்பில் இருந்து வருகிறேன் எனக்கு ஒரு 5 நிமிடம் அனுமதி கொடுங்கள் என் உடையை மாற்றி விட்டு வந்துவிடுகிறேன்" என்று கேட்டார்.
மேலும் விஜய் அவர்களுடன் பேசிய பொது " 20 வருடங்களாக என்னை பார்க்க முயற்சி செய்தது எனக்கு தெரியாமல் இருந்தது எனக்கு மிக பெரிய அசிங்கமாக இருக்கிறது" என்றும் விஜய் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
பார்வையற்ற ரசிகர்களிடம் 5 நிமிடம் அனுமதி கேட்ட விஜய், கனவு நினைவான நிகழ்வு
Reviewed by Author
on
January 09, 2020
Rating:

No comments:
Post a Comment