இரட்டை சதம் அடித்து அசத்திய மேத்யூஸ்
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஹராரேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், ஆட்டமிழக்காமல் 200 ரன்களை கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில், 4 இடங்கள் முன்னேறி 16 வது இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் ஆகஸ்ட் 2014-ல், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். அதேபோல ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒருவராக இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை சதம் அடித்து அசத்திய மேத்யூஸ்
Reviewed by Author
on
January 28, 2020
Rating:
No comments:
Post a Comment