மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லாப்பட்டையுடன் இருவர் கைது-படம்
மன்னாரில் மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லாப் பட்டைகளுடன் இரண்டு நபர்களை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை 27.01.2020 மாலை கைது செய்துள்ளனர்.
கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று திங்கட்கிழமை (27) மாலை சன்னார் பகுதிக்குச் சென்று இரண்டு நபர்களை கைது செய்ததோடு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 70 கிலோ வல்லாப்பட்டையினை மீட்டுள்ளனர்.
-கைது செய்யப்பட்ட 21 மற்றும் 60 வயதுடைய இரண்டு நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
-மீட்கப்பட்ட வல்லாப்பட்டை பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 28, 2020
Rating:

No comments:
Post a Comment