வாழ்க்கை முழுவதும் தோளோடு அணைத்து ஹரியை பாதுகாத்தேன்... இனி முடியாது: கலங்கும் இளவரசர் வில்லியம் -
இப்போதெல்லாம் வாஞ்சையாக எனது சகோதரர் ஹரியின் தோள் மீது கை போடவே என்னால் முடியவில்லை என கூறும் இளவரசர் வில்லியம், கடந்த ஓராண்டாக இந்த வலியை அனுபவித்து வருகிறேன் என தமது நண்பரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அரண்மனையை விட்டு வெளியேற ஹரி மற்றும் மேகன் எடுத்துள்ள முடிவானது, தற்போது சகோதரர்கள் இருவரையும் இணைய முடியாத அளவுக்கு பிரித்துள்ளது.
இருப்பினும் ராணியார் அழைப்பு விடுத்துள்ள முக்கிய கூட்டத்திற்கு சகோதரர்கள் இருவரும் திங்களன்று பங்கேற்க உள்ளனர்.
அந்த கூட்டத்தில் தமது மன ஓட்டத்தை, படும் வேதனையை இளவரசர் வில்லியம் பதிவு செய்வார் என்றே நம்பப்படுகிறது.

மேலும், ஹரி மற்றும் மேகன் ஆகியோர் கண்டிப்பாக அரண்மனைக்கு திரும்புவார்கள் எனவும் இளவரசர் வில்லியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருமணம் முடிந்து ஒரு பிள்ளைக்கு தாயான பின்னரும் இதுவரை பிரித்தானியா கலாச்சாரத்துடன் ஒன்றாத நிலையில் இருக்கும் தமது மனைவியை எண்ணியே இளவரசர் ஹரி அச்சப்படுகிரார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே, அரண்மனையில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க இளவரசர் ஹரியை தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ராணியாரால் திங்களன்று தமது நோர்போக் அரண்மனையில் கூட்டப்படும் பிரத்யேக கூட்டத்திற்கு இளவரசர்கள் சார்லஸ், வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி தற்போது கனடாவில் தங்கியிருக்கும் மேகன், இந்த கூட்டத்தில் வீடியோ அழைப்பில் கலந்து கொள்வார் எனவும் தெரியவந்துள்ளது.
நோர்போக் அரண்மனை கூட்டத்திற்கு பின்னரே ராணியாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

இதனிடையே தமது மகனும் மருமகளும் அரண்மனையை விட்டு வெளியேறுவது தமக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறும் இளவரசர் சார்லஸ்,
இந்த விவகாரம் தொடர்பில் உறுதியான சிறந்த முடிவை மேற்கொள்ள அரண்மனையில் உள்ள மொத்த அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்க்கை முழுவதும் தோளோடு அணைத்து ஹரியை பாதுகாத்தேன்... இனி முடியாது: கலங்கும் இளவரசர் வில்லியம் -
Reviewed by Author
on
January 13, 2020
Rating:
No comments:
Post a Comment