சினிமாவில் கோடிக்கணக்கில் நடிகர்களின் சம்பளம்!
சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் என்று கேட்டால் உடனே வேறு யார், ஹீரோக்கள் தான் என்று சொல்வார்கள். பிரபல நடிகர்களாக இருந்தால் இரண்டு இலக்க தொகையில் வாங்குவார்கள்.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகர்களாக இருந்தால் ஒற்றை இலக்கத்தில் கோடிகளில் வாங்குவார்கள். ஆனால் நடிகைகள் கோடிகளின் சம்பளம் பெற திண்டாட வேண்டியுள்ள நிலையும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
அண்மையில் நடிகர் கமல்ஹாசனிடம் நடிகர்களின் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள் என நீண்ட நாளாக குற்றச்சாட்டு இருக்கத்தான் செய்கிறது.
அது இட்லி விலை போல. இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல கூடும் குறையும். திறமைதான் அவர்களின் சம்பளத்தை உயர்த்துகிறது. மக்கள் தரும் பாராட்டுக்களே சம்பளத்தை தீர்மானிக்கிறது.
முதன் முதலாக நான் ரூ 250 சம்பளமாக பெற்றேன் என கூறினார்.
சினிமாவில் கோடிக்கணக்கில் நடிகர்களின் சம்பளம்!
Reviewed by Author
on
January 13, 2020
Rating:

No comments:
Post a Comment