கனடாவில் மூன்று பேர்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்:
கனடாவில் வெறும் மூன்று பேர்தான் ஆட்கொல்லி சீன கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால், அதற்கும் கனடாவில் வாழும் சீனர்கள் மீதான இனவெறித் தாக்குதல் தொடங்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
ரொரன்றோவில் வாழும் Terri Chuவின் ட்விட்டர் கணக்கில் குப்பை போல் விமர்சனங்கள் குவிந்துவிட்டதாம்.
அத்தனையும் இனவெறுப்பைக் காட்டும் விமர்சனக்கள். இப்படி வெறுக்கப்படுவதற்கு Terri Chu செய்த தவறு? வேறென்ன, சீனராக பிறந்துவிட்டு கனடாவில் வசிப்பதுதான்.
சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி, அது பரவத் தொடங்கியதும் மற்ற நாடுகளில் வசிக்கும் சீனர்கள் மீதான பார்வை மாறியுள்ளது. அவர்கள் வெறுப்புடன் பார்க்கப்படுகிறார்கள்.
மோசமான இனவெறுப்பு ரீதியான விமர்சனங்கள் அவர்கள் மீது வைக்கப்படுகின்றன. 2003இல் சீனாவிலிருந்து சார்ஸ் பரவியபோதும் இதே இனவெறித்தாக்குதல் நடந்திருக்கிறது.
அந்த நேரத்தில் பல சீன வியாபார நிறுவனங்கள் பலத்த அடி வாங்கியுள்ளன. சுற்றுலாப் பயணிகளும் ரொரன்றோவில் சீனர்கள் அதிகம் வாழும் பகுதிகளை புறக்கணிக்க, ஒரு பில்லியன் கனடா டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முறை அப்படி நடக்காது என்று நினைத்தேன் என்கிறார், சீன கனேடிய சமூக நீதிக்கான தேசிய கவுன்சிலின் தலைவரான Amy Go.
ஆனால், அதே நிலை மீண்டும் திரும்புவதாக தோன்றுகிறது என்று கூறும் அவர், அது சமூக ஊடகங்களால் இன்னும் அதிகரிக்கப்போகிறது என்கிறார்.
அவர் சொன்னது போலவே, ரொரன்றோவிற்கு அருகிலுள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் 9,000 பேர், கடந்த நாட்களில் சீனாவுக்கு சென்று வந்த சீன மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது என்று கோரி புகார் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் பாடகர், இது நிறுத்தப்பட வேண்டும், காட்டு மிருகங்களை சாப்பிட்டு, உங்களை சுற்றியுள்ளவர்க்கு நோய்களை பரப்புவதை நிறுத்துங்கள் என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
வீட்டுக்குள் அடைந்து கிடங்கள் அல்லது உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போய்விடுங்கள் என்றும் எழுதியுள்ளார் அவர்.
’இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் மறைந்துவிடும். ஆனால், இது சுகாதாரம் தொடர்பான பிரச்சனை அல்ல, இது கனடாவில் காணப்படும் இனவெறிப் பிரச்சனை’ என்கிறார் Amy Go.
இப்படி ஒரு சூழ்நிலையிலிருந்து,நாம் எல்லோரும் கூட்டாக செயல்பட்டால் சிறந்து விளங்க முடியும் என்பதைக் கற்றுக்கொள்வது மட்டுமே நல்லது என்கிறார் அவர்.
கனடாவில் மூன்று பேர்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்:
Reviewed by Author
on
January 29, 2020
Rating:

No comments:
Post a Comment