‘நிலைமை மோசமாகிவிட்டது.. வெளியேறிவிடுங்கள்’குடிமக்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள உச்சக்கட்ட எச்சரிக்கை
ஈரானிய தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, கனடா அரசு, ஈரானில் உள்ள கனேடியர்கள் நாட்டை விட்டு வெளியேறவதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு நிலைமை ‘ எச்சரிக்கையுடன் மோசமடையக்கூடும்’.
மேற்கத்திய நலன்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பொதுவாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
பரவலான போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் முதல் ஈராக்கிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் கனேடியர்களிடம் கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு பயணிப்பதைப் பொறுத்தவரை, கனேடியர்கள் "அதிக எச்சரிக்கையுடன்" இருக்க வேண்டும். வரவிருக்கும் நாட்களில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் ஏற்படக்கூடும் என்று பயண ஆலோசகர் கூறினார்.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின், நிலைமையை காட்டுக்குள் கொண்டு வர முயற்சியில் இரு தரப்பினரும் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள கனடியர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈராக்கில் கனேடிய தூதரகம் உள்ளது, ஆனால் ஈரானில் இல்லை. எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும், தூதரக உதவிகளை வழங்க கனேடிய அதிகாரிகளின் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது என்று அரசாங்கம் எச்சரிக்கிறது.
ஈராக் அல்லது ஈரான் அல்லது எந்தவொரு நாட்டிற்கும் பயணம் செய்ய முடிவு செய்பவர்கள் கவனத்திற்கு, உங்கள் நகர்வுகளை கட்டுப்படுத்துதல், உங்கள் சுற்றுப்புறங்களை அறிந்திருத்தல் மற்றும் ஊடக அறிக்கைகளை கண்காணித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு பரிந்துரைக்கிறது.
ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்களை கூட்டங்களை கனோடியர்கள் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘நிலைமை மோசமாகிவிட்டது.. வெளியேறிவிடுங்கள்’குடிமக்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள உச்சக்கட்ட எச்சரிக்கை
Reviewed by Author
on
January 04, 2020
Rating:

No comments:
Post a Comment