அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி - பலர் காயம் -


ஜேர்மனியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ஜேர்மனிய நகரமான Rot am See பகுதியில் சற்று முன்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில், சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக பொலிஸார்.
கைது செய்யப்பட்ட நபரை தவிர்த்து துப்பாக்கிச் சூட்டில் வேறு யாரும் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜேர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி - பலர் காயம் - Reviewed by Author on January 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.