தமிழ்நாட்டில் ஐந்து இலங்கை அகதிகள் கைது -
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த ஐந்து இலங்கை அகதிகள் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள விசாரணை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த அகதிகள், முகாமில் இருந்து தப்பிய நிலையில், சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல முனைந்த வேளை தமிழக பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது நூறுக்கும் மேற்பட்ட அகதி முகாம்கள் உள்ள நிலையில், சுமார் 59 ஆயிரம் இலங்கை அகதிகள் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முகாம்களுக்கு வெளியே 30 ஆயிரம் பேர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்து இலங்கை அகதிகள் கைது -
Reviewed by Author
on
January 25, 2020
Rating:

No comments:
Post a Comment