வடக்கில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை! ஆளுநர் விசேட அறிவிப்பு -
வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பரவிய தகவலால் இன்று காலை முதல், வடக்கின் பல பகுதிகளின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரான், ஈராக் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, எரிபொருளை சேமிக்க பொதுமக்கள் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
மக்கள் வீண் வதந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்று வடக்கு ஆளுநர் கேட்டுள்ளார்”.

Reviewed by Author
on
January 10, 2020
Rating:

No comments:
Post a Comment