மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழா...படங்கள்
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழா இன்று 20.01.2020 திங்கட்கிழமை காலை பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். ஆயரோடு பல அருட்தந்தையர்களும் இணைந்து திருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
திருவிழாவின் போது இறைவாத்தையைப் பகிர்ந்த மன்னார் ஆயர் அவர்கள் “நமது திரு அவையில் காலந்தோறும் இறைவனால் நமக்கு வழங்கப்படும் மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள”; என்று எடுத்துரைத்தார். அத்தோடு 475 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துவுக்காக கொல்லப்பட்ட நம் மன்னார் திரு அவையின் மைந்தர்கள் இன்னும் சிறிது காலத்தில் இறை அடியார்களாக அறிவிக்கப்படவுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
பெருந்தொகையான இறைமக்களும் துறவிகளும் இத் திருவிழாத் திருப்பலியில் கலந்து செபித்தனர். மாலை வேளையில் மறைசாட்ச்சியான புனித செபஸ்தியார் இரதபவனியாக மின்விளக்குகள் ஒளிர இறைமக்கள் நடுவே ஆலய மணியோசைமுழங்க வீதியுலாவந்து இறைமக்களுக்கு அருளாசிவழங்கினார். புதுமக்களாக இறைவிசுவாசத்தில் இணைந்திருக்க திருவிழா வாழ்த்துக்கள்.

Reviewed by Author
on
January 20, 2020
Rating:

No comments:
Post a Comment