சுவிஸில் காணாமல் போன தமிழர்! கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள் -
கடந்த ஒரு மாத காலமாக 55 வயதாகும் உதயகுமார் ராஜரட்ணம் என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது மகன் ரதூஷன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன நபர் தொடர்பான தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி இலக்கம் 062 871 13 33 என்பதாகும்.
தந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியாமை தொடர்பில் மனவேதனையில் இருப்பதாக ரதூஷன் (22) தெரிவித்துள்ளார்.
தமது தந்தை திடீரென்று காணாமல் போனமைக்கான காரணம் என்னவென்று இதுவரை தங்களால் கண்டறியமுடியவில்லை. அவர் உயிருடன் இருப்பதாக அறிகுறி மட்டும் கிடைத்தால் போதும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன தந்தை ஒருநாள் வீடு திரும்புவார் என மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக ரதூஷன் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸில் காணாமல் போன தமிழர்! கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள் -
Reviewed by Author
on
January 13, 2020
Rating:

No comments:
Post a Comment