மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வை நிறுத்த அரச அதிபர் இது வரை ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை- தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் விசனம்.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வை நிறுத்துவது தொடர்பாக இது வரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று வெள்ளிக்கிழமை(10)மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானிற்கு அவசர கடிதம் ஒன்னை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு இடம் பெறுவதை தடுக்குமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி (27.12.2019) மன்னாரில் கண்டன போராட்டம் நடாத்தி அரசாங்க அதிபருக்கு மகஜர் சமர்ப்பித்திருந்தோம்.
ஆனால் அரசாங்க அதிபர் இது வரை எது வித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக தெரிய வில்லை.எமக்கு இது வரை பதில் தரவும் இல்லை.
அரசாங்க அதிபரும் இதை மறைமுகமாக ஆதரிக்கிறாரோ எனும் ஐயம் எழுகின்றது?
ஆகவே சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்கின்றது.
எனவே கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள் இந்த சட்டவிரோத மண் அகழ்வை இடை நிறுத்தியுள்ளனர்.
அதே போல் மன்னார் மாவட்டத்திலும் இடை நிறுத்த வேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த நிலமை தொடருமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் இயற்கை அனர்த்தத்தையும் எதிர் கொள்ள நேரிடலாம்.
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று வெள்ளிக்கிழமை(10)மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானிற்கு அவசர கடிதம் ஒன்னை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு இடம் பெறுவதை தடுக்குமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி (27.12.2019) மன்னாரில் கண்டன போராட்டம் நடாத்தி அரசாங்க அதிபருக்கு மகஜர் சமர்ப்பித்திருந்தோம்.
ஆனால் அரசாங்க அதிபர் இது வரை எது வித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக தெரிய வில்லை.எமக்கு இது வரை பதில் தரவும் இல்லை.
அரசாங்க அதிபரும் இதை மறைமுகமாக ஆதரிக்கிறாரோ எனும் ஐயம் எழுகின்றது?
ஆகவே சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்கின்றது.
எனவே கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள் இந்த சட்டவிரோத மண் அகழ்வை இடை நிறுத்தியுள்ளனர்.
அதே போல் மன்னார் மாவட்டத்திலும் இடை நிறுத்த வேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த நிலமை தொடருமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் இயற்கை அனர்த்தத்தையும் எதிர் கொள்ள நேரிடலாம்.
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வை நிறுத்த அரச அதிபர் இது வரை ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை- தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் விசனம்.
Reviewed by Author
on
January 12, 2020
Rating:

No comments:
Post a Comment