15 ரோஹிங்கியாக்கள் பலி-மலேசியா நோக்கி சென்ற அகதிகள் படகு விபத்து.
வங்கதேசத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 130 ரோஹிங்கியா அகதிகளுடன் மலேசியா நோக்கி சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 15 ரோஹிங்கியாக்கள் உயிரிழந்துள்ளனர். மரப்படகு மூலம் வங்காள விரிகுடா கடலை கடக்க முயன்ற போது, படகு விபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த அகதிகள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
வங்கதேச கடலோர காவல்படைக்கு இவ்விபத்து தொடர்பாக மீனவர்கள் தெரிவித்திருந்த நிலையில், மூழ்கிக்கொண்டிருந்த படகு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது உயிருக்குப் போராடி கொண்டிருந்த அகதிகளில் 73 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பல அகதிகளை தேடும் பணி தொடர்வதாகக் கூறியிருக்கிறார் கடலோர காவல்படையின் பேச்சாளர் ஹமிதுல் இஸ்லாம்.
இதில் மீட்கப்பட்ட ஜமிலா பிபி எனும் ரோஹிங்கிய் அகதி, மலேசியாவில் உள்ள தனது கணவனைக் காண இப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ரோஹிங்கியா அகதி, “நான் முகாமில் சரியாக சாப்பிடவில்லை. எங்கும் சுதந்திரமாக செல்ல முடியாது. மலேசியாவுக்கு சென்றால் நல்ல வாழ்க்கை அமையலாம் என்ற நம்பிக்கையில் படகு வழியாக மலேசியா செல்ல நினைத்தேன்,” எனக் கூறினுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
படங்கள் நன்றி: Hai Do/VOA

Reviewed by Author
on
February 12, 2020
Rating:

No comments:
Post a Comment