மன்னார் பிரிமீயர் லீக்' நிர்வாகம் அறிவிப்பு-மன்னார் பிரிமீயர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர் வரும் 16 ஆம் திகதி ஆரம்பம்
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள 'மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது எதிர் வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.
அதற்கான இறுதி கலந்துரையாடல் நேற்று 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்தரையாடலின் போது போட்டி சம்மந்தமாகவும், போட்டியை நடாத்துவது தொடர்பாகவும்,சட்ட விதி முறைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர் வரும் வெள்ளிக்கிழமை (14) ஆம் திகதி அன்று கழகங்களின் சீருடை,போட்டியின் கின்னம் அறிமுகம் என்பன இடம் பெறும்.
எதிர் வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் போட்டி கோலா கலமாக ஆரம்பித்து வைக்கப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்து மைதான ஒழங்குகள் இடம் பெற்று வருகின்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 10 உரிமையாளர்களினால் 10 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சியையும் உரிமையாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
முதலாவது போட்டியானது 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கழகங்களின் அணி வகுப்புடன் மன்னார் நகர மத்தியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை நோக்கி பவணியாக அழைத்து வரப்பட்டு முதலாவது போட்டி இடம் பெறவுள்ளதாக 'மன்னார் பிரிமீயர் லீக்' நிர்வாகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கான இறுதி கலந்துரையாடல் நேற்று 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்தரையாடலின் போது போட்டி சம்மந்தமாகவும், போட்டியை நடாத்துவது தொடர்பாகவும்,சட்ட விதி முறைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர் வரும் வெள்ளிக்கிழமை (14) ஆம் திகதி அன்று கழகங்களின் சீருடை,போட்டியின் கின்னம் அறிமுகம் என்பன இடம் பெறும்.
எதிர் வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் போட்டி கோலா கலமாக ஆரம்பித்து வைக்கப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்து மைதான ஒழங்குகள் இடம் பெற்று வருகின்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 10 உரிமையாளர்களினால் 10 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சியையும் உரிமையாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
முதலாவது போட்டியானது 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கழகங்களின் அணி வகுப்புடன் மன்னார் நகர மத்தியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை நோக்கி பவணியாக அழைத்து வரப்பட்டு முதலாவது போட்டி இடம் பெறவுள்ளதாக 'மன்னார் பிரிமீயர் லீக்' நிர்வாகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரிமீயர் லீக்' நிர்வாகம் அறிவிப்பு-மன்னார் பிரிமீயர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர் வரும் 16 ஆம் திகதி ஆரம்பம்
Reviewed by Author
on
February 10, 2020
Rating:

No comments:
Post a Comment