இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக மீண்டும் சாள்ஸ் நிர்மலநாதனை போட்டியிட வைக்க தீர்மானம்...படம்
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழுகூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜாட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச் செல்வம் பரஞ்சோதி, தமிழரசுக்கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சட்டத்தரணி எஸ்.டினேஸன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் கிளைக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது எதிர் கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆயராயப்பட்டது.
மேலும் இவ்வருடம் இம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் போது தமிழரசுக்கட்சியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை நியமிப்பது என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களிடம் விளக்கம் கோறி கடிதம் அனுப்புதன், கிராம மட்டங்களில் மக்கள் சந்திப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மன்னார் பிரதேச சபையில் இடம் பெற்று வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் பிரதேச சபை உறுப்பினரினால் விளக்கமளிக்கப்பட்டது.

Reviewed by Author
on
February 10, 2020
Rating:

No comments:
Post a Comment