இந்தோனேசியாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 13,000 அகதிகள்
இந்தோனேசியாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 13,657 அகதிகள் தங்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்.
இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்திருக்கிறார் ஆணையத்தின் இந்தோனேசிய பிரதிநிதி அன் மேமன். ஆப்கானியர்களுக்கு அடுத்த நிலையில், சோமாலியா மற்றும் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜகார்த்தா நகரத்திற்கு சுற்றி தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அகதிகள் சுமையாக இருக்க விரும்பவில்லை. அவர்களும் நம்மை போன்ற மக்கள் தான். அவர்கள் திறமைகள், திறன்கள், அறிவு மற்றவருக்கு உபயோகப்படக்கூடியதாக இருக்கக்கூடும்,” எனக் கூறியிருக்கிறார் ஐ.நா. பிரதிநிதி மேமன்.
“1951 அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடாக இருக்கிறது இந்தோனேசியா. இருந்த போதிலும், தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு இந்தோனேசியா நீண்டகாலமாக பாதுகாப்பு அளித்து வருகிறது,” என்கிறார் மேமன்.
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற பல இலங்கைத் தமிழ் அகதிகளும் இந்தோனேசியாவில் வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 02, 2020
Rating:

No comments:
Post a Comment