அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 50 வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படங்கள்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை -02-2020 காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

-ஜேர்மன் நாட்டின் உயர் மறைமாவட்டத்தின் நிதி உதவியுடன்,கறிற்றாஸ் செடேக் அமைப்பினூடாக குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

-முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் இடம் பெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம வருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,கறிற்றாஸ் செடே தேசிய நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை மகேந்திர குணதிலக்க,மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார்,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,முசலி பிரதேசச் செயலாளர் வசந்தகுமார்,கடற்படையின் வடமேல் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் றுவான் பெரேரா உற்பட அருட்தந்தையர்கள், முள்ளிக்குளம் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் வீடுகளுக்கான அடிக்கல் ஆசிர் வதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 11 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் வரகை தந்த விருந்தினர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.குறித்த வீடுகள் ஒவ்வென்றும் தலா 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 50 வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படங்கள் Reviewed by Author on February 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.