அண்மைய செய்திகள்

recent
-

திரைப்படமாக மாறும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியின் நாவல்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானியின் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ எனும் நாவல் விரைவில் திரைப்படமாக உருவெடுக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை Sweetshop & Green, Aurora Films மற்றும் Hoodlum Entertainment எனும் தயாரிப்பு நிறுவனங்கள் தனது கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெஹ்ரூஸ் பூச்சானி. இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நாவலாக அவர் எழுதியிருந்தார்.

இந்நாவல் இலக்கிய பரிசுகளை வென்றிருந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்க சென்ற அவர் மீண்டும் அத்தீவுக்கு திரும்பவே இல்லை.

திரைப்படமாக மாறும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியின் நாவல் Reviewed by Author on February 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.