பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ள 265பயணிகள் -
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு நிலையங்களில் தடுத்து வைத்து தனிமைப்படுத்தல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முற்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பேருந்துகளில் 265 விமானப் பயணிகள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் கண்காணிப்பு சோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாட்டுக்கு வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ள 265பயணிகள் -
Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment