மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் நீதவான் முன்னிலையில் 2வது நாளாகவும் அகழ்வு பணி
உற்பட்ட வியாயடிப்
பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில்
பொருட்கள புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலில் குறித்த
பகுதியில் இரண்டாவது நாளகவும் இன்று வெள்ளிக்கிழமை(13) காலை அகழ்வு முதல்
அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
-எனினும் குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெற்று வருகின்ற போதும் தற்போது வரை எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்கு உற்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(13) காலை 2 ஆவது நாளாகவும் மன்னார் நீதவதன் முன்னிலையில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் நீதவான் முன்னிலையில் 2வது நாளாகவும் அகழ்வு பணி
Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment