500 மில்லியன் ரூபா நிதி கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு - அமைச்சரவை அனுமதி -
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்காக 500 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான முதலீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானத்துக்கு அமைய அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஒன்றிணைந்த நிதியத்திடம் காணப்படும் நிதியைச் செலவிடுவதற்கான அதிகாரம் திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஔடத பற்றுச்சீட்டுக்கான மிகுதியை செலுத்துவதற்காக 102 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உரக் கொள்வனவின் மிகுதியை செலுத்துவதற்கு 3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் மத்திய தர நிர்மானப் பணிகளுக்கான பற்றுச்சீட்டு மிகுதியை செலுத்த 5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சுற்றுலா, ஆடை கைத்தொழில், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கான கடனை மீளச் செலுத்த 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பணி முதலீட்டுக்கு 4 வீத வட்டியின் கீழ் கடனை வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலின் செலவுகளுக்காக 8 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கிடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
500 மில்லியன் ரூபா நிதி கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு - அமைச்சரவை அனுமதி -
Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment