உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு - கொரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம்!
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த கூடிய ஒன்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை கையாண்டால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம் அந்த அமைப்பின் தலைவர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கொரோனா வைரஸ் பெருந்தொற்று. அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக அதனை கட்டுப்படுத்தலாம்.
எனினும், சில நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 120,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு - கொரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம்!
Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment